இரட்டை திருப்பதி கோவிலில் கருட சேவை


இரட்டை திருப்பதி கோவிலில் கருட சேவை
x
தினத்தந்தி 26 Jun 2023 12:30 AM IST (Updated: 26 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை திருப்பதி கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

நவதிருப்பதிகளில் 4-வது திருப்பதியான இரட்டை திருப்பதி தொலைவில்லி மங்கலம், அரவிந்தலோசனர் கோவிலில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம், 9.30 மணிக்கு பூர்ணாகுதி, சிறப்பு திருமஞ்சனம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், பகல் 1 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5.15 மணிக்கு தொலைவில்லி மங்கலம், செந்தாமரை கண்ணன் வாகனத்தில் எழுந்தருளினார்கள். மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் உலா வந்தனர்.

இதில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவலமணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story