கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா


கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல் எடையாளத்தில் கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சியை அடுத்த மேல் எடையாளம் கிராமத்தில் உள்ள கருமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தோில் எழுந்தருள அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. இதில் மேல் எடையாளம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல் எடையாளம் கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story