கருணாநிதி பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் பகுதியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, ஒன்றியக்குழு துணைதலைவர் விமலாமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மொத்தம் 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிராமபுறங்களில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட மரக்கன்றுகள் அனுப்பிவைக்கப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரவிக்குமார், பூங்கலியன், நீலமேகம், அன்பழகன், கரிகாலன், மணிவேல், தேவராஜன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர்
இதேபோல் திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகரமன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் டி.குணா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகரமன்ற தலைவருமான டி.என். முருகன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி மணி என்கிற சுப்பிரமணி நன்றி கூறினார்.