கருணாநிதியின் நூற்றாண்டு விழா: தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


கருணாநிதியின் நூற்றாண்டு விழா: தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர்

நூற்றாண்டு விழா

தமிழகம் முழுவதும் நேற்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நேற்று கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தி.மு.க. கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பல்வேறு இடங்கள்

இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, மாநகர செயலாளர்கள் எஸ்.பி.கனகராஜ், கரூர் கணேசன், தாரணி சரவணன், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story