சரக்கு வாகனத்தில் கொண்டு சென்ற கருந்திரி பறிமுதல்
சரக்கு வாகனத்தில் கொண்டு சென்ற கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் திருத்தங்கல்-விருதுநகர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய அனுமதியின்றி 600 குரோஸ் கருந்திரி கொண்டு சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தாயில்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 26), மகேஸ்வரன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கருந்திரி கொண்டு செல்ல பயன்படுத்திய சரக்குவாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story