நொண்டி கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு


நொண்டி கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 26 Jun 2023 12:45 AM IST (Updated: 26 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நொண்டி கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 6-ம் வாய்க்கால் ரோட்டில் பழமையான நொண்டி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் தடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த 23-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவந்து கோபுர விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். பின்னர் கருப்பண்ணசாமி, மகா பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சினிமா நடிகர் டெல்லி கணேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story