வயிற்றில் 10 கிலோ அளவில் வீங்கிய குடலை வெற்றிகரமாக அகற்றிய கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவமனை
வயிற்றில் 10 கிலோ அளவில் வீங்கிய குடலை வெற்றிகரமாக அகற்றிய கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 24). பட்டதாரி வாலிபரான இவருக்கு வயிறு கடுமையாக வீங்கி கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவமனையை அணுகினார். அப்போது அவருக்கு பிறவியிலேயே பல்வேறு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஆசன வாய் உருவாகாமல் இருந்ததால், பிறந்தவுடன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெருங்குடல் வெளியே எடுத்து வைக்கப்பட்டது. அடுத்த கட்ட அறுவை சிகிச்சைக்காக அவர் செல்லாததால் பெருங்குடலின் அடிப்பாகம் வயிற்றுக்குள் வீங்க தொடங்கியது. 24 வருடங்களாக வீங்கியதினால், மருத்துவமனையை அணுகும் போது அவருக்கு அக்குடல் பகுதி வயிற்றில் உள்ள பிறகுடல் மற்றும் உறுப்புகளை அழுத்தி கொண்டிருந்தது. அதனால் அவருக்கு கடுமையான வயிறு வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு உணவு உட்கொள்ள முடியாமல் எடை கடுமையாக குறைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு குடல், கனையம், கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சு.சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழு அதிக ஆபத்துகள் நிறைந்த இந்த அறுவை சிகிச்சையை செய்து, வயிற்றில் இருந்த சுமார் 10 கிலோ அளவிலான வீங்கிய குடல் பகுதியை முழுமையாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நன்கு உணவு உட்கொள்ள ஆரம்பித்துள்ளார் எனவும், இதற்கு பின் அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இவ்வகை வியாதி மிகவும் அரிது என்றும், ஆபத்து நிறைந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக கரூரில் மேற்கொள்ளப்பட்டது எனவும் டாக்டர். சு.சதாசிவம் கூறினார்.