காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு
மகாதேவப்பட்டினம் காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவாரூர்
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் 45 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடந்தது.முன்னதாக வேத விற்பன்னர்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் ஒவ்வொரு கோபுரத்திற்கும் கொண்டு சென்றனர். பின்னர் 10 மணி அளவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து காசி விஸ்வநாதருக்கு மகா.தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குடமுழுக்கையொட்டி மகாதேவபட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story