கிரிக்கெட் போட்டியில் காட்பாடி அணி வெற்றி


கிரிக்கெட் போட்டியில் காட்பாடி அணி வெற்றி
x

வேலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் காட்பாடி அணி வெற்றி பெற்றது.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், காவல்துறை சார்பில் 3 அணிகள் உள்பட 24 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. ஒரு அணிக்கு 6 ஒவர்கள் வீதம் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

இறுதிபோட்டியில் காட்பாடி 11 அணியும், செஞ்சூரியன் பென்னாத்தூர் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த செஞ்சூரியன் பென்னாத்தூர் அணியினர் 7 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய காட்பாடி 11 அணியினர் 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர். இந்த தொடரின் சிறந்த ஆட்டக்காரராக செஞ்சூரியன் பென்னாத்தூர் அணியை சேர்ந்த நவீன்குமாரும், சிறந்த பந்துவீச்சாளராக காட்பாடி 11 அணியை சேர்ந்த மணியும், இறுதிபோட்டியின் ஆட்டநாயகனாக காட்பாடி 11 அணியை சிரஞ்சீவியும் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற காட்பாடி 11 அணிக்கு ரூ.20 ஆயிரம், வெற்றி கோப்பை மற்றும் 2-ம் இடம் பிடித்த செஞ்சூரியன் பென்னாத்தூர் அணிக்கு ரூ.10 ஆயிரம், கோப்பை ஆகியவற்றை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.


Related Tags :
Next Story