கட்டபெட்டு எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


கட்டபெட்டு எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 4 May 2023 1:30 AM IST (Updated: 4 May 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கட்டபெட்டு எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு எல்லக்கம்பையில் அமைந்துள்ள எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு அலங்கார பூஜை, மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பெண்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் கைகளில் பால்குடங்கள் மற்றும் அக்கினி சட்டிகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று எல்லை மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அதில் சில பக்தர்கள் பறவைகாவடியில் அலகு குத்தி தொங்கியவாறு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து துடும்பாட்டம், கரகாட்டம், சிங்காரி மேளம் உள்ளிட்ட களை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பகல்1 மணிக்கு பொங்கல் பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று, 6 மணிக்கு அம்மனை ஆற்றில் கரைசேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story