காயல்பட்டினம் கடற்கரையில்பணிக்கநாடார் குடியிருப்பு பள்ளிதேசிய மாணவர் படை முகாம்
காயல்பட்டினம் கடற்கரையில் பணிக்கநாடார் குடியிருப்பு பள்ளி தேசிய மாணவர் படை முகாம் நடந்தது.
ஆறுமுகநேரி:
புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் காயல்பட்டினத்தில் பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை முகாம் நடந்தது. முகாமில் பள்ளி தேசிய மாணவ-மாணவியர் காயல்பட்டினம் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சுபேதார் கணேசன் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் 95 மாணவ, மாணவியர் பங்கேற்று கடற்கரையில் உள்ள குப்பைகளை சேகரித்து காயல்பட்டினம் நகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைத்தனர். ஹவில்தார் மேஜர்..தேசிங்கு ராஜா ஒருங்கிணைத்தார். இத்தூய்மை பணியில் ஹவில்தார் தமங் மற்றும் சந்தோஷ், காயல்பட்டினம் நகராட்சி ஊழியர்கள், ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்ணியில் ஈடுபட்ட மாணவ மாணவிகளை. ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வே. செல்வம், பொருளாளர் விஜய சேகர் ஆகியோர் பாராட்டினர்.