காயல்பட்டினம் வாவு வஜிஹா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா
காயல்பட்டினம் வாவு வஜிஹா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் வாவு வஜிஹா பெண்கள் கல்லூரியின் 13- வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தலைவர் வாவு எஸ். செயயது அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார்.கல்லூரியில் செயலாளர் வாவு மொஹ்தஸிம், பொருளாளர் ஹபிபுல்லா, உதவி செயலாளர் எஸ். எ. ஆர். அகமது இஸ்ஸாக், கல்லூரி முதல்வர் வி.ரமா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகர் கலந்து கொண்டு 404 இளங்கலை பெண் பட்டதாரிகள், 31 முதுகலை பெண் பட்டாதாரிகளுக்கும் பட்டங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 19 மாணவிகளுக்கும் மேலும் முதுகலை துறையில் தமிழ் துறையில் பல்கலைக தரவரிசைபட்டியலில் முதலிடம் பெற்ற தமிழ் பாட மாணவி வி. சண்முகசுந்தரிக்கு தங்கப் பதக்கத்தினையும் மற்றும் அரபி பாடத்தில் முதலிடம் பெற்ற பி. எஸ்.எம்.மொகுதூம் மீரா நாச்சிக்கும் தங்க பதக்கங்களை வழங்கினார். விழாவில், காயல்பட்டினம் நகரசபை தலைவர் கே.ஏ.எஸ் முத்து முகமது, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் அப்துல் காதர், கல்லூரி முதல்வர் காஜா முஹைதீன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், வாவு வஜிஹா கல்லூரியின் டைரக்டர் மெர்சி ஹென்றி, முன்னாள் கல்லூரி முதல்வர் வாசுகி, உட்பட்ட திரளான பெற்றோர்களும், மாணவிகளும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.