கயத்தாறு அரசுமேல்நிலைப் பள்ளியில்மாணவிகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி
கயத்தாறு அரசுமேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு வட்டார பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கினார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் அடுப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தாஜீன்னிசாபேகம், வட்டார வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கற்பகவல்லி, லட்சுமி, நவநீதசக்தி, சுபாஷிணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் 74 மாணவிகள் பங்கேற்றனர். கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களை வைத்து 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மாணவிகள் சமைத்தனர். இதில் முதலிடம் பிடித்த மூன்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.