செஞ்சி பகுதி மக்களை அச்சுறுத்தும்கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்புவனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


செஞ்சி பகுதி மக்களை அச்சுறுத்தும்கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்புவனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி பகுதி மக்களை அச்சுறுத்தும் கரடியை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி எம்.ஜி.ஆர். நகர், கோனை புதூர், சோமசமுத்திரம் ஆகிய மலைக்குன்றுகள் சார்ந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் கரடி ஒன்று கடந்த சில நாட்களாக அவ்வப்போது சுற்றித்திரிந்து வந்தது. இதைபார்த்த கோனைபுதூர் பகுதி இளைஞர்கள் சிலர் கரடியை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதோடு, இதுபற்றி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனிடையே கரடி வயல்வெளியில் சுற்றித்திரிந்த காட்சிகள் சமூக வளைத்தலத்தில் வைரலானது. இதையடுத்து செஞ்சி வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோனைபுதூர் பகுதியில் கரடியை பிடிக்க பலாப்பழங்களுடன் கூண்டு வைத்துள்ளனர். இதுகுறித்து செஞ்சி வனச்சரகர் வெங்கடேசன் கூறுகையில், கரடி அதிகமாக நடமாடுவதாக கூறப்பட்ட கோனைபுதூர் மலைக்குன்று அருகே பெரிய கூண்டு வைத்ததுடன், அதில் பலாப்பழம் போட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குறிப்பாக கரடி வனப்பகுதியில் இருந்து தினமும் வெளியில் வருவது கிடையாது. ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே அது வனப்பகுதியில் இருந்து வெளியில் வரும். ஆகவே 2 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். இருப்பினும் செஞ்சி பகுதி மக்களை அச்சுறுத்தும் கரடியை கூடிய விரைவில் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.


Next Story