காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரிசின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா


காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரிசின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

தேனி

சின்னமனூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் சித்ரா(வயது 23). நேற்று இவர், சி்ன்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நானும், மார்க்கையன்கோட்டையை சேர்ந்த சுமார் 25 வயதான ஆட்டோ டிரைவரும் காதலித்து வந்தோம். அப்போது அவர் என்னிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மேலும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இதனால் நான் அவரது வீட்டிற்கு தேடி சென்றபோது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வெளியூரில் வசித்து வருவது தெரியவந்தது. எனவே காதலனை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்திய பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் கூறினர். இதை கேட்காத சித்ரா போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story