கீரமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 'நீட்' தேர்வில் சாதனை


கீரமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் சாதனை
x

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ‘நீட்’ தேர்வில் சாதனை புரிந்துள்ளனர்.

புதுக்கோட்டை

மகளிர் மேல்நிலைப்பள்ளி

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கீரமங்கலம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 கிராமங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படித்த மாணவிகள் தற்போது டாக்டர், நர்சு, என்ஜினீயர், ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் 'நீட்' தேர்வு தொடங்கிய பிறகு தமிழ்நாடு அரசால் 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 4 மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார்கள். அதேபோல் அடுத்த ஆண்டு 7 மாணவிகளும், கடந்த ஆண்டு ஒரு மாணவியும் தேர்ச்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனர்.

மீண்டும் சாதனை

அதேபோல் இந்த ஆண்டு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 135 மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதியிருந்தனர். 'நீட்' தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சுருதி 457 மதிப்பெண்களும், ஜனனி 418 மதிப்பெண்களும், சுபதாரணி 375, சுவேதா 348, ஸ்ரீரஞ்சிதா 322, சங்கவி 319 மதிப்பெண்கள் என 300 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவிகள் பெற்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் 225 மதிப்பெண்களுக்கு மேல் 300 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.

இதேபோல் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் மனோஜ் 339 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் வழக்கம்போல் கீரமங்கலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story