கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி


கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி
x

விளையாட்டு போட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

விருதுநகர்


மாநில அளவில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் 18 பேர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இவர்களில் 12 பேர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன் கேடயமும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story