கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைக்க வேண்டும்


கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைக்க வேண்டும்
x

கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைக்க வேண்டும் என அமலு விஜயன் எம்.எல்.ஏ. மனுகொடுத்துள்ளார்.

வேலூர்

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

குடியாத்தம் நகராட்சியின் மையப் பகுதியில் அமையப்பெற்ற கெங்கையம்மன் கோவில் அருகில் உள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றுத்தரைப்பாலம் நீண்ட காலமாக பிரதான போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மேம்பால கட்டுமான பணியினை நெடுஞ்சாலைத்துறை அல்லது பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் ஜூன் மாதம் 30-ந் தேதி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆகவே குடியாத்தம் கெங்கைபம்மன் கோவில் தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் மேம்பாலமாக விரைந்து அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story