பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து வாலிபர் காயம்


பாக்கெட்டில் வைத்திருந்த   செல்போன் வெடித்து வாலிபர் காயம்
x

ராணிப்பேட்டை அருகே பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து, வாலிபர் காயம் அடைந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து, வாலிபர் காயம் அடைந்தார்.

செல்போன் வெடித்தது

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 22). இவர் நேற்று முன்தினம் மாலை தன்னுடைய உறவினர் ஒருவரை ெரயில் ஏற்றி விடுவதற்காக அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ெரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு உறவினரை விட்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் அம்மூர்- லாலாபேட்டை சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துவின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவருடைய கால் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்து வைத்திருந்த செல்போன் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட வெளிநாட்டு செல்போன் என்பதும், அது தரமற்றதாக இருந்ததால் வெடித்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வாலிபரின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story