பெட்ரோல், டீசலுக்காக குமரி எல்லையில் குவிந்த கேரள வாகனங்கள்
கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. இதனால் தமிழக எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்-டீசல் நிரப்ப கேரள வாகனங்கள் குவிந்து வருகின்றன.
களியக்காவிளை,
கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. இதனால் தமிழக எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்-டீசல் நிரப்ப கேரள வாகனங்கள் குவிந்து வருகின்றன.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு
கேரளாவில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கேரளாவில் ஒரு லிட்டர் ரூ. 107-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரூ.109 ஆகவும், அதே போல் ரூ.96-க்கு விற்பனையான டீசல் ரூ.98 ஆகவும் உயர்ந்துள்ளது.
எல்லையில் குவியும் கேரள வாகனங்கள்
ஆனால் தமிழக - கேரளா எல்லையான குமரியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.87-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.50-க்கும் விற்கப்படுகிறது. இதை அறிந்த தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குமரியின் எல்லைப் பகுதியில் உள்ள தமிழக பெட்ரோல் பங்குகளுக்கு வந்து தங்கள் இரு சக்கர வாகனம், கார் மற்றும் லாரிகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.கேரளா எல்லை பகுதியில் உள்ள கேரள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்-டீசல் நிரப்ப யாரும் வராததால் அவை வெறிச்சோடி காணப்படுகிறது.
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ், 'கேரளாவில் அடுத்தடுத்து 2 முறை பெட்ரோல், டீசல் விலையை கேரளா அரசு உயர்த்தி உள்ளது. இதனால் எங்களை போன்ற ஆட்டோ டிரைவர் மற்றும் கார், லாரி ஓட்டுனர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயரும் போது வாடகை கார் மற்றும் ஆட்டோ கட்டணங்களும் உயர்த்த வேண்டியுள்ளது. இதனால் சின்ன, சின்ன சவாரிக்கு மக்கள் வருவதில்லை, அரசு பஸ்சுக்கு காத்து நின்று ஏறி செல்கின்றனர். இது எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, வருவாய் இழப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் வந்து பெட்ரோல் நிரப்பினால் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3.50-ம் லாபம் கிடைக்கும்.. கேரள அரசு வாகன ஓட்டிகளின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு விலை உயர்வை வாபஸ்