Normal
கேசராங்கண்மாயில் மீன்பிடி திருவிழா
கேசராங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே கேசராபட்டி கிராமத்தில் உள்ள கேசராங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் உள்ள மடை முன்பு தேங்காய் உடைத்து வெள்ளை துண்டு வீசிய பின்பு கண்மாயில் ஆலவயல், அம்மன்குறிச்சி, வலையப்பட்டி, கண்டியாநத்தம், ைமலாப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர். அவர்கள் 1 கிலோ முதல் 5 கிலோ வரை எடை கொண்ட நாட்டுவகை மீன்களான விரால் வகை மீன்களை ஆர்வத்துடன் பிடித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு கிடைத்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story