அறச்சலூர் அருகே கே.ஜி.வலசு புனித சவேரியார் ஆலய திருவிழா வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது
வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது
ஈரோடு
அறச்சலூர் அருகே உள்ள கே.ஜி.வலசு கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த ஒரு வாரம் நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் அருட்தந்தை கே.எம்.சி.அருண் தலைமையில் நடந்தது. தொடர்ந்து மாதாவின் சொரூபம் (சிலை) வைக்கப்பட்டு வேண்டுதல் தேர் கே.ஜி.வலசு கிராமத்தின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. வீதிகளின் 2 பக்கமும் நின்று பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
நிகழ்ச்சிகளை ஆலய பங்குத்தந்தை கிளாடியஸ் சேவியர் தலைமையில் கே.ஜி.வலசு புனித சவேரியார் இளைஞர் குழுவினர், பங்கு பெரியவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story