கரீஷ்மா தைக்கா பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றம்
நெல்லை தச்சநல்லூர் கரீஷ்மா தைக்கா பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் சீனியப்பன் திருத்து பகுதியில் அமைந்துள்ள கரீஷ்மா தைக்கா பள்ளிவாசலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 7 மணி அளவில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் பள்ளிவாசல் முன்பு உள்ள மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பரம்பரை இணை முத்தவல்லிகள் இனாயத்துல்லா, பத்ருதீன், ஜலாலுதீன் மற்றும் எம்.கே.எம்.முகமது ஷாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு விளக்கு வைபவம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story