காசி-தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்


காசி-தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
x

காசி-தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காசி தமிழ்ச் சங்கமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து நடத்தும் சங்கமத்தின் பின்னணியில் இருப்பது இந்துத்துவா - சனாதனப் பயிற்சியே. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். மத்திய அரசின் எதேச்சதிகாரத் தன்மையை நிறைவேற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்தான் கவர்னர் ஆர்.என்.ரவி. அன்றாடம் அவருடைய பேச்சுகளும், நடவடிக்கைகளும் அவரது இந்தப் போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றன.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து இந்த காசி தமிழ்ச் சங்கமத்தை' நடத்துகிறார்களாம். நவீன மருத்துவத்தை யோகாவையும், ஆயுர்வேதத்தையும் கொண்டு மேம்படுத்துவார்களாம்.

'தேசபக்தி' என்ற சொல்லின் மீது, மதவெறியை ஏற்றுவதும், பழைய பண்பாடு, பாரம்பரியம் என்ற பெயரில் ஒற்றை மதச்சாயத்தை ஊற்றுவதும்தான் வெகுமக்களை ஏமாற்றித் தன் வலையில் விழ வைக்க ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடிக்கும் தந்திரங்கள். தமிழ்நாடு அரசைத் தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேசப் போகிறோம் என்றால், அதன் உள்நோக்கம் என்ன?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story