பேன்சி கடைக்காரருக்கு அடி-உதை


பேன்சி கடைக்காரருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் பேன்சி கடைக்காரருக்கு அடி-உதை விழுந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காமராஜபுரம் அருணாசலம் மகன் கிருத்திகை ராஜன் (வயது 47). இவர் ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையிலுள்ள காமராஜபுரத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் கடையில் இருந்த ஒரு பொம்மை விலை கேட்டனர். கடைக்காரர் விலை கூறியதை கேட்ட அவர்கள், பொம்மைக்கு விலை அதிகம் என்று கூறியுள்ளனர். அத்துடன் பணம் கொடுக்காமல் ரூ.8,500 மதிப்புள்ள பொம்மைகளை எடுத்துக் கொண்டு 3 பேரும் வெளியேறியுள்ளனர். அவற்றுக்கான பணத்தை தருமாறு கேட்ட கிருத்திகை ராஜனை அந்த 3 பேரும், அருகில் கிடந்த விறகு கட்டையால் சரமாரியாக அடித்தனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த 3 பேரும் பொம்மைகளை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிசென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து அந்த 3 மர்ம நபர்களை தேடிவருகிறார்.


Next Story