ஓசூரில் பிளஸ்-1 மாணவி கடத்தல்?-சிறுவன் மீது புகார்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 21-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் மாணவியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் தங்களது மகளை சின்ன எலசகிரியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறி இருந்தனர். இந்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story