கோவில்பட்டியில் காரில் கடத்திய3மூட்டைபுகையிலைபொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் காரில் கடத்திய 3மூட்டைபுகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் ஹரிகண்ணன், அமல்ராஜ் மற்றும் போலீசார் மந்தித்தோப்பு ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 3 மூட்டைகளில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா ஓ. மேட்டுப்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவகுரு செந்தில் பிரபு (வயது 34) என்பவரை கைது செய்து, கார் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story