லோடு ஆட்டோவில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோவில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
நாலாட்டின் புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லிங்கம்பட்டி கிராம சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆட்டோவை நிறுத்திவிட்டு, அதில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது 50 கிலோ எடை யுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத் தனர். தப்பியோடிய லோடு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story