மொபட்டில் கடத்திய 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


மொபட்டில் கடத்திய 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 3 Jun 2023 1:52 AM IST (Updated: 3 Jun 2023 8:41 AM IST)
t-max-icont-min-icon

மொபட்டில் கடத்திய 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு

தாளவாடி சிமிட்டஹள்ளி அருகே உள்ள ரோட்டில் வட்ட வழங்கல் அலுவலர் ரா.பிரகாஷ், தனி வருவாய் ஆய்வாளர் சு.தர்மராஜன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் 3 பேர் 2 மூட்டைகளுடன் வந்து கொண்டிருந்தனர்.

அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் மொபட்டை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் மொபட்டில் இருந்த மூட்டைகளை பிரித்ததில் அவற்றில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 3 பேர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story