இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்


இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே இளம்பெண் கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே எம்.தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரேகா (21 வயது). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேகா மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதில், தேன்கனிக்கோட்டை அருகே சீர்திம்மனபள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற வாலிபர் தனது மனைவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story