இளம்பெண் கடத்தல்


இளம்பெண் கடத்தல்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிதி (வயது21). சம்பவத்தன்று கிருஷ்ணகிரி வந்த அவர் மீண்டும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதில். காவேரிப்பட்டணத்தை சேர்ந்த இன்பசேகரன் என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காவேரி


Next Story