பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை


பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை
x

பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அருண்பிரபு (வயது 14). இவர் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் முத்துலட்சுமி திங்கட்கிழமை கண்டிப்பாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது அம்மாவுடன் நேற்று முன்தினம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அருண்பிரபு வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் மாலை வரை அவர் வீட்டிற்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிைடக்கவில்லை. இதுகுறித்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story