காரில் சென்ற பெண்ணை கடத்தி கத்திமுனையில் கூட்டு பலாத்காரம்: 6 பேர் கும்பல் கைது


காரில் சென்ற பெண்ணை கடத்தி கத்திமுனையில் கூட்டு பலாத்காரம்: 6 பேர் கும்பல் கைது
x

காரில் சென்ற பெண்ணை கடத்திச்சென்று கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஒருவர் ஓட்டினார்.

அப்போது அவரது காரை வழிமறித்த மர்மநபர்கள், கத்தியை காட்டி மிரட்டி கார் டிரைவரை தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டனர். பின்னர் அந்த பெண்ணை, காரோடு கடத்திச்சென்றனர். அங்கிருந்த காலி இடத்தில் அந்த பெண்ணை கத்திமுனையில் மிரட்டி 6 பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த பெண்ணிடம் இருந்த 8 பவுன் நகையையும் பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

6 பேர் கைது

பாதிக்கப்பட்ட அந்த பெண், இதுபற்றி போரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் சென்ற பெண்ணை கடத்தி கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்ததுடன், நகையையும் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொளுத்துவான்சேரியை சேர்ந்த சூர்யா (வயது 21), கருப்பையா(28), தினேஷ்(29), சுரேஷ்(19), சந்தோஷ்(22) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா போதையில் இவர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story