மோட்டார் சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தல்


மோட்டார் சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தல்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன தணிக்கை

வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நூக்கம்பாடி அருகே இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது.

அந்த கோவிலில் இருந்த சிலையை இவர்கள் திருடினார்களா? அல்லது வேறு எங்காவது திருடி வந்தார்களா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

மேலும் ஏற்கனவே தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் சிலை கடத்தி வந்த 2 பேரை தானிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.


Next Story