சிறுநீரகத்தில் கல் அடைப்பு: நடிகர் பிரபு ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி
நடிகர் பிரபுக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,
நடிகர் பிரபுக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டத்தில் சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.
தற்போது பிரபு பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது.
Related Tags :
Next Story