கூடலூர் அருகே டீக்கடைக்காரரை கொன்றது: வனத்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் காட்டு யானை- முதன் முறையாக சங்கர் கும்கி யானை களத்தில் இறங்கியது


கூடலூர் அருகே டீக்கடைக்காரரை கொன்றது:  வனத்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் காட்டு யானை-  முதன் முறையாக சங்கர் கும்கி யானை களத்தில் இறங்கியது
x

கூடலூர் அருகே டீக்கடைக்காரரை கொன்ற காட்டு யானை வனத்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது. இப்பணியில் முதன் முறையாக சங்கர் என்ற கும்கி யானையும் களத்தில் இறங்கியுள்ளது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே டீக்கடைக்காரரை கொன்ற காட்டு யானை வனத்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது. இப்பணியில் முதன் முறையாக சங்கர் என்ற கும்கி யானையும் களத்தில் இறங்கியுள்ளது.

காட்டு யானை

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு காட்டு யானை தாக்கி ஆனந்தகுமார் என்ற டீக்கடைக்காரர் பலியானார். தொடர்ந்து அதே பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பாரம் என்ற இடத்தில் மற்றொரு காட்டுயானை தாக்கி மும்தாஜ் என்ற பெண் பலியானார். இதனால் காட்டு யானைகளை விரட்டக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய், சங்கர் உட்பட 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆனந்தகுமாரை கொன்ற காட்டு யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கண்காணிப்பு வளையத்தில்

தொடர்ந்து காட்டு யானையை பிடிப்பது குறித்து வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இதனால் காட்டு யானையை பாதுகாப்பான இடத்துக்கு விரட்டி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனிடையே கிளன்வன்ஸ் பகுதியில் காட்டு யானை நேற்று முகாமிட்டிருந்தது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு வளையத்தில் காட்டு யானை உள்ளது.

தொடர்ந்து அப்பகுதி மக்களையும் வனத்துறையினர் உஷார்படுத்தினர். இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு சேரம்பாடியில் 3 பேரை கொன்ற சங்கர் என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் பராமரித்து வந்தனர். தொடர்ந்து கும்கி யானையாக மாற்றி பயிற்சி அளித்து வந்தனர். தற்போது முதன்முறையாக காட்டு யானையை விரட்டும் பணிக்காக சங்கர் கும்கி யானையை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.


Next Story