ஈரோட்டில் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீச்சு: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


ஈரோட்டில் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீச்சு:  கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
x

ஈரோட்டில் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீசப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு

ஈரோட்டில் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீசப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கொலை

ஈரோடு மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியில் நேற்று முன்தினம் இரவு துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி வந்து சாக்கடையில் வீசி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 தனிப்படைகள்

இந்த நிலையில் கொலையாளிகளை பிடிப்பதற்காக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தீபா, கோமதி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்டவரின் விவரங்களை கண்டறியும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது. வேறு மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு வந்து பிணம் வீசப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. இதனால் ஈரோடு உள்பட மற்ற மாவட்டங்களிலும் யாராவது மாயமாகி இருக்கிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.


Related Tags :
Next Story