மயிலம் போலீஸ் ஏட்டு சாவு


மயிலம் போலீஸ் ஏட்டு சாவு
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் போலீஸ் ஏட்டு இறந்தாா்.

விழுப்புரம்

மயிலம்:

திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது45 ). இவர் மயிலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி திருவேங்கடம் உயிரிழந்தார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ(18) என்ற மகளும், இன்பரசன்(17) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story