புல்வாமா தாக்குதலில் பலியானஎல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி
எட்டயபுரம் அருகே ராமனூத்து பள்ளியில் புல்வாமா தாக்குதலில் பலியான எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமையில் நடந்தது. வீரர்களின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், பள்ளி மாணவ-மாணவியர் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை இந்திரா உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story