மழலையர் ஆண்டு விழா


மழலையர் ஆண்டு விழா
x

புதூர் கிங்ஸ் பள்ளியில் மழலையர் ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே உள்ள புதூர் கிங்ஸ் பள்ளியில் 'கே.ஜி.பெஸ்ட்' என்ற தலைப்பில் மழலையர் பிரிவு ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜேம்ஸ் நவமணி தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் காலின் வாக்ஸ்டாப் முன்னிலை வகித்தார். மழலையர் பிரிவில் பயிலும் அனைத்து குழந்தைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கருப்பொருளுக்கேற்ற பல வண்ணமயமான ஆடைகளை அணிந்து நடனம் ஆடினர்.

விழாவில் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆனந்தசாம், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சகாயமேரி, துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்களுடன் மாணவர்களும், பெற்றோர்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story