மழலையர் பட்டமளிப்பு விழா


மழலையர் பட்டமளிப்பு விழா
x

புஷ்பலதா பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை புஷ்பலதா சர்வதேச பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் தலைமை தாங்கினார். பட்டம் பெற்ற மழலையர்களின் அணிவகுப்புடன் விழா தொடங்கியது. மழலையர் மற்றும் 5-ம் நிலை மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக மருத்துவர் ஜோசப் எஸ். பெடாலிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது கண்டிப்பாக வெற்றி நம்மை வந்தடையும் என்றார். அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் காட்வின் எஸ்.லாமுவேல், ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story