மாமன்னன் ராஜராஜசோழன் 1037-வது சதய விழா


மாமன்னன் ராஜராஜசோழன் 1037-வது சதய விழா
x

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா 2, 3-ந் தேதிகளில் இரு நாட்கள் கொண்டாடப்படுகிறது என சதயவிழாக்குழுத் தலைவர் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா 2, 3-ந் தேதிகளில் இரு நாட்கள் கொண்டாடப்படுகிறது என சதயவிழாக்குழுத் தலைவர் கூறினார்.

சதய விழா

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தஆண்டு 1037-வது சதய விழா 2 நாட்கள் நடைபெறுகிறது.இந்த சதய விழா குறித்து விழாக்குழு தலைவர் து.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1037 வது சதய விழா இந்த ஆண்டு வருகிற 2 மற்றும் 3-ந்தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.முதல்நாளான 2-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கமும், பின்னர் மேடை நிகழ்ச்சிகளும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

விருது வழங்கும் விழா

மாலை திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், வயலின் இசை நிகழ்ச்சி, கவியரங்கம், நகைச்சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறவுள்ளது.2-ம் நாள் 3-ந் தேதி காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை திருவீதிவுலா, பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறுகிறது.

மின்விளக்கு அலங்காரம்

மேலும் பெரிய கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமை குறித்து அதிகமானோர் திரைப்படம் வாயிலாக தெரிந்து கொண்டிருப்பதால், சதயவிழாவுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் வகையில் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story