கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா


கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
x

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்திபெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் வருகிற 9-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி இன்று யாக சாலை பூஜைகள் தொடங்கியது. கணபதி ஹோமம், அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, நவக்கிரக சாந்தி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story