கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்தநாள் விழா
கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்தநாள் விழாவில்கலெக்டர், எம்.பி. மாலை அணிவித்தனர்.
வேலூர்
காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஞான திருவளாகம் உள்ளது. இங்கு அவரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி., ஆகியோர் வாரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பரமசிவம், கவிஞர் ச.லக்குமிபதி, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story