மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்காக விழுப்புரம் நகராட்சியில் சமையல் அறை கட்டுமான பணிகள் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி ஆய்வு


மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்காக    விழுப்புரம் நகராட்சியில் சமையல் அறை கட்டுமான பணிகள்    நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி ஆய்வு
x

மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்காக விழுப்புரம் நகராட்சியில் சமையல் அறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அத்திட்டத்தை சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நகராட்சியை பொறுத்தவரை 13 பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள 1,500 மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், நரசிங்கபுரம் பகுதியிலும் நகராட்சி சார்பில் தலா ரூ.23 லட்சம் மதிப்பில் பொது சமையல் அறை கூடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையல் அறை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், அதே நேரத்தில் அடிப்படை வசதிகளுடன் தரமான முறையில் கட்டவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, வார்டு செயலாளர் குமார், வார்டு கவுன்சிலர் மகிமை பிரிஜித் பிரியாபிரேம், அரசு ஒப்பந்ததாரர் கோவிந்தராஜ், வார்டு நிர்வாகிகள் தண்டபாணி, வின்சென்ட்ராஜ், சசி, வீரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story