கிளிக்குடி அரசு பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை


கிளிக்குடி அரசு பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை
x

கிளிக்குடி அரசு பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தேக்வாண்டோ போட்டியில் கிளிக்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷர்மிளா தேவி 38 கிலோ தேக்வாண்டா பிரிவில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் தங்கம் வென்றார். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாணவி ஷார்மிளாதேவி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story