கிளிக்குடி அரசு பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை
கிளிக்குடி அரசு பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
புதுக்கோட்டை
அன்னவாசல்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தேக்வாண்டோ, தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் 2 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமையில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
Related Tags :
Next Story