விவசாயிக்கு கத்திக்குத்து


விவசாயிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜலாலுதீன். இவருடைய மகன் அப்துல் ரகுமான் (வயது36). நேற்று இவரது வீட்டு வாசலில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான மாரிமுத்து(48). என்பவர் குடிபோதையில் சத்தம் போட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்துல் ரகுமான் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகையன், ஜப்திஸ்ஜேயா, புனிதவள்ளி ஆகியோர் அவரிடம் கேட்டுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான், மாரிமுத்துவை கத்தியால் கழுத்தில் குத்தினார். படுகாயம் அடைந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரகுமான், முருகையன், ஜப்திஸ்ஜேயா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story