சேலம் வழியாக இயக்கப்படுகிறது கொச்சுவேலி - பெங்களூரு, தாம்பரம்- மங்களூரூ சிறப்பு ரெயில்-முன்பதிவு இன்று தொடக்கம்


சேலம் வழியாக இயக்கப்படுகிறது கொச்சுவேலி - பெங்களூரு, தாம்பரம்- மங்களூரூ சிறப்பு ரெயில்-முன்பதிவு இன்று தொடக்கம்
x

கொச்சுவேலி- பெங்களூரு, தாம்பரம்- மங்களூரு சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. முன்பதிவு இன்று தொடங்குகிறது.

சேலம்

சூரமங்கலம்:

சிறப்பு ரெயில்கள்

கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ெரயிலை ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும், தாம்பரத்தில் இருந்து மங்களூருவுக்கு கோடைகால சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ெரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி கொச்சுவேலி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06083) வருகிற 25-ந் தேதி முதல் ஜூன் 27-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயம்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 10.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கம்

இதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரு - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06084) வருகிற 26-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த ெரயில் பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக மாலை 4.57 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

தாம்பரம்- மங்களூரூ

தாம்பரம்- மங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06041) வருகிற 25-ந் தேதி முதல் ஜூன் மாதம் 27-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், குட்டிபுரம், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூரூ ரெயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் மங்களூரு - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06042) வருகிற 26-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரெயில் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 9.33 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.35 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் காலை 4.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story