வடமாநில வாலிபர்கள் குடியிருந்த வீட்டில் பறந்தது பாகிஸ்தான் கொடியா?


வடமாநில வாலிபர்கள் குடியிருந்த வீட்டில் பறந்தது பாகிஸ்தான் கொடியா?
x
திருப்பூர்


பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் பத்மகிருஷ்ணா தோட்டத்தில் வட மாநில இளைஞர்கள் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வருகின்றனர். இதில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர்களும் உள்ளனர். இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மிலாடி நபி நோன்பு வருவதால் முஸ்லிம் வாலிபர்கள் குடியிருக்கும் வீட்டின் கூரையின் மேல், பச்சை நிறத்தில், முஸ்லிம் கொடியை பறக்க விட்டுள்ளனர்.இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் கொடியை ஏற்றி பறக்க விட்டுள்ளதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் சென்று விசாரணை செய்தனர். அப்போது, அது முஸ்லிம் மதத்திற்கான கொடி எனவும், பாகிஸ்தான் கொடி அல்ல என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் திரும்பி சென்றனர். முஸ்லிம் கொடியை பாகிஸ்தான் கொடி என நினைத்து போலீசாரை வரவழைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story